என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இடைத்தேர்தல் முடிவு குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் உள்ள ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. அவர் மண்ணின் மகன் என்று உணர்வுபூர்வமாக பேசினார். ஆனால் மக்கள் அவரது பேச்சை நிராகரித்துவிட்டனர். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர். எடியூரப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் 2 தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
அனைத்து மந்திரிகளும் அந்த தொகுதியில் தங்கி ஓட்டு சேகரித்தனர். ஆனால் மக்கள் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. எடியூரப்பா ஆட்சியில் நீடித்து இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவு இவ்வாறு தான் வந்திருக்கும். பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது.
பா.ஜனதா எந்தவிதமான வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. நான் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கட்சியின் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு மற்றும் மேலிடத்தின் முடிவே இறுதியானது.
ஹனகல் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி டெபாசிட் இழந்துள்ளது. தேவேகவுடா 10 நாட்கள் 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். அவர் அனுபவம் வாய்ந்த தலைவர். அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணம் என்ன என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை நம்பவில்லை. அந்த கட்சி ஒரு சந்தர்ப்பவாத கட்சி என்பது அவர்களுக்கு தெரியும்.
மக்களின் பிரச்சினைகள்
இந்த மாத இறுதிக்குள் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சட்டசபை கூட்டத்தொடர் நடக்கவில்லை. வட கர்நாடக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அங்கு சுவா்ண சவுதா கட்டப்பட்டது. பிட்காயின் வழக்கில் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை முதல்-மந்திரி கூற வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர சொல்லி அழைப்பதும் அவர் இழுத்தடிப்பதும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி ரஜினி தன் அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார்.
தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி ‘அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அரசியல் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் ரஜினி தீவிரம் காட்டினார்.
பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ரஜினி களம் இறங்குவார் என்று எல்லோரும் எதிர் பார்த்தார்கள். ஆனால் அவர் வழக்கம்போல் ‘இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அடுத்து வரவுள்ள சட்டசபை தேர்தலில் பார்த்துக்கொள்வோம்’ என்று அறிவித்தார். இது ரஜினி ரசிகர்களிடையே கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனவே அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் உருவாக்கி டிரெண்ட் செய்ய தொடங்கினார்கள். நேற்று இரவு வரை இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்தது.
இந்த முறை வாக்களித்து விட்டேன், அடுத்த முறை கண்டிப்பாக ரஜினிக்குத் தான் என் வாக்கு என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திடீர் என்று உருவாக்கப்பட்ட இந்த ஹேஷ்டேக், இந்திய அளவில் முதலிடத்துக்கு சென்றது ரஜினி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே #Rajinikanth
அருணாசல பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன், 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்துக்கும் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தற்போதைய முதல்- மந்திரி பெமா காண்டு, முக்தோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.163 கோடி சொத்துடன் முதல்-மந்திரி பெமா காண்டு முதல் இடத்தில் உள்ளார்.
மொத்த வேட்பாளர்களில் 131 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களில் 67 பேருக்கு ரூ.5 கோடிக்கு அதிகமான சொத்துகளும், 44 பேருக்கு ரூ.2 கோடிக்கு மேல் சொத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Arunachal #PemaKhandu
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பாரதிய ஜனதாவினர் தமிழகத்தை குறிவைத்து கூட்டணி தொடர்பாகவும், தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாளை(ஞாயிற்றுக் கிழமை) திருப்பூர் மாவட்டம் பெருமா நல்லூரில் நடக்க உள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க மோடி வரும் போது அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு குறித்தும் பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
அந்த வகையில் ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 14-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்த தகவலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பவானியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
மேலும் வானதி சீனிவாசன் கூறும் போது, பிரசாரத்துக்காக வரும் அமித்ஷா முன்னதாக நெசவாளர்கள் ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். அமித் ஷாவின் வருகையால் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் கொங்கு மண்டல பா.ஜ.க. கூட்டமாக நடக்கும். ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டமாக இருக்கும் லட்சக்கணக்கான பேர் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். #AmitShah #BJP
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 7 மாநில சட்ட சபைகளுக்கான தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது. பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் பாராளுமன்றம் மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் 9 முதல் 10 கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், காஷ்மீர், மராட்டியம், அரியானா ஆகிய 7 மாநில சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், இதன் மூலம் அரசுக்கு தேர்தல் நடத்தும் செலவும் குறையும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலை தளங்களில் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை என்ற பெயரில் ஒரு பட்டியல் வெளியானது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுதான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில் இதுபோன்று வெளியான தகவல்கள் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தை கருத்தில் கொண்ட தேர்தல் கமிஷன் இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீசின் தகவல் தொழில்நுட்ப பிரிவு களத்தில் இறங்கியுள்ளது.
தேர்தல் அட்டவணை முதன் முதலில் எங்கு இருந்து பரவியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Election #Parliament
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்